Sunday,25th of November 2012
சென்னை::பணத்துக்காகவோ, எண்ணிக்கைக்காகவோ படங்களில் நடிக்கவில்லை என்றார் த்ரிஷா. தமிழில் ‘சமர்’, ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. தெலுங்கில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள புதிய படமொன்றில் நடிக்கிறார். ‘அருந்ததி’ படத்தில் அனுஷ்கா நடித்ததுபோன்ற வேடம் என்பதாலும், அதிக சம்பளம் தருவதாக தயாரிப்பாளர் கூறியதையடுத்தும் இந்த படத்தை த்ரிஷா ஒப்புக்கொண்டதாக சிலர் கூறினர். ஆனால், பட குழுவினரோ ‘கதாபாத்திரம் பிடித்திருந்ததால்தான் த்ரிஷா ஒப்புக்கொண்டார்’ என்றனர். பணத்துக்காக நடிப்பதாக கூறுவதை த்ரிஷா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இது வெறும் அதிர்ஷ்டத்தால் நடக்கவில்லை. நான் ஏற்று நடித்த வேடங்களும் அதற்கு முக்கிய காரணம். நான் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தாலும் அதில் எனது கதாபாத்திரம் பேசப்பட்டது. அதுபோன்ற கதாபாத்திரத்தை நான் ஒதுக்கியதில்லை. எந்தவொரு படத்தையும் பணத்துக்காகவோ, எண்ணிக்கையை கூட்டிக்காட்டுவதற்காகவோ, போனா போகிறதென்றோ ஒப்புக்கொண்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் வீட்டில் இருக்கும்போது கூட அந்த நேரத்தை பயனுள்ள வழியில்தான் செலவிடுவேன்’’ என்றார்.
Comments
Post a Comment