கவுதம் மேனன் படம் : சமந்தா நடுக்கம்!!!

Tuesday,20th of November 2012
சென்னை::கவுதம் மேனன் பட ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க சமந்தாவுக்கு பயம் அதிகரித்துள்ளதாம். ‘பாணா காத்தாடி“ பட ஹீரோயின் சமந்தாவுக்கு ‘நான் ஈ வெற்றிபடமாக அமைந்தது. இதையடுத்து மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. தோல் நோய் பாதிப்புக்குள்ளான அவர் இரண்டு படங்களிலிருந்தும் விலகினார். நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். ஏற்கனவே நடித்து வந்த ‘நீதானே என் பொன் வசந்தம் படத்தின் ஷூட்டிங் சமந்தாவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அவர் குணம் அடைந்ததும் அதன் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். இப்படம் வரும் டிசம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க சமந்தாவுக்கு பயமும் கூடிக்கொண்டே போகிறதாம். இப்படத்தை பற்றி சமீபகாலமாக தொடர்ச்சியாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வருகிறார். இதுபற்றி அவர் நேற்று குறிப்பிட்டுள்ள தகவலில், ‘நீ தானே என் பொன்வசந்தம் டிசம்பர் 14ல் ரிலீஸ். அதற்கான நாள் நெருங்க நெருங்க நடுக்கம் கூடிக்கொண்டே போகிறது. நிச்சயம் அப்படத்தை நீங்கள் (ரசிகர்கள்) விரும்புவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Comments