Sunday,4th of November 2012
சென்னை::தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிற விஷயம் என்னவென்றால், அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு இசையமைக்கப் போவது என்ற கேள்விதான்.
அந்த வகையில், அஜீத்தின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன்சங்கர் ராஜாதான் இசையமைக்கப் போகிறார் என்று பேச்சு வந்தது. அதன்பின், ‘கொலவெறி’ புகழ் அனிருத் இசையமைக்கிறார் என்ற செய்தியும் வந்தது. ஆனால்,
தற்போது அஜீத்-சிவா இணையும் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் பிரபலமானவர். இவர் இசையில் வெளிவந்துள்ள அனைத்து பாடல்களும் வெற்றியடைந்துள்ளன.
முதல்முறையாக அஜீத் படத்துக்கு இசையமைக்கப்போகும் தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தமிழ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Comments
Post a Comment