புதுநாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது’ வெங்கட்பிரபுவுக்கு ஹன்சிகா கண்டிஷன்!!!

Tuesday,13th of November 2012
சென்னை::புதுமுக ஹீரோயினுக்கு படத்தில் முக்கியத்துவம் தரக்கூடாது என்று இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு ஹன்சிகா கண்டிஷன் போட்டுள்ளாராம். கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்காக ஹீரோயின் தேர்வு செய்வதில் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் நிலவியது. ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்ட ரிச்சா தனது கதாபாத்திரத்தை மாற்றிவிட்டதாக கூறி வெளியேறினார். இதற்கிடையில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் இங்கிலாந்து நடிகை மேன்டி தக்கர் என்ற புதுமுக நடிகையையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார் இயக்குனர். இதனால் ஹன்சிகா கோபம் அடைந்தாராம். சமீபத்தில் வெங்கட் பிரபுவிடம் பேசிய ஹன்சிகா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாராம். படத்தில் என்னை ஹீரோயினாக தேர்வு செய்தீர்கள். எனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தாராம். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கட் பிரபு இங்கிலாந்து நடிகை மேன்டி தக்கர் கிளாமர் வேடத்துக்காகவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஹீரோயின் நீங்கள்தான். உங்கள் பாத்திரத்துக்குத்தான் முக்கியத்துவம் என்று சமாதானம் கூறியதாக தெரிகிறது. இதனால் பட குழுவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Comments