Sunday,25th of November 2012
சென்னை::லிங்குசாமி இயக்க சூர்யா நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சமந்தா. வரும் மார்ச் மாதம் முதல் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.
‘பீட்சா படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் அடுத்து ‘யா யா படத்தில் கிளாமர் வேடத்திலும், மலையாளத்தில் ‘அப் அண்ட் டவுன் என்ற படத்தில் பரதநாட்டிய டான்ஸராகவும் நடிக்கிறார்.
ஆராத்யாவின் ஒன்றாவது பிறந்த நாளை தொடர்ந்து கோவாவிற்கு விடுமுறை கால சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் ஐஸ்வர்யாராய் அதற்கு முன்னதாக சிங்கப்பூர் செல்கிறார். அங்கும் கையோடு குழந்தையை அழைத்துச் செல்கிறார்.
கோவாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழா பனோரமா பிரிவில் சற்குணம் இயக்கத்தில் விமல், இனியா நடித்த ‘வாகை சூட வா படம் இன்று திரையிடப்படுகிறது.
‘பிரியாணி பட ஷூட்டிங்குக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா பட ஹீரோ கார்த்திக்கும், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வாழ்த்து கூறிவிட்டு, படப்பிடிப்பையும் பார்த்தாராம்.
மனுநீதி’, ‘சவுண்ட் பார்ட்டி’ படங்களை தயாரித்தவர் ஜி.ஆர். இவர், வி.சேகர் இயக்கிய ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ படத்தை கன்னடத்தில் தயாரித்ததுடன் தற்போது கன்னட நடிகர் தேவராஜ் மகன் ஹீரோவாக நடிக்க ‘சூப்பர் சாஸ்திரி’ என்ற படத்தை ரவி ராஜா இயக்கத்தில் தயாரித்து சாஸ்திரி வேடத்தில் நடித்து ரிலீஸ் செய்துள்ளார். அடுத்து தமிழில் படம் தொடங்குகிறார்.
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தையடுத்து இந்த ஆண்டு இறுதி படமாக சித்தார்த் நடிக்கும் படத்தில் சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘ஜபர்தஸ்த்’ என்று தலைப்பு வைக்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் மலேசியாவில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான இசை பயிற்சியில் பிஸியாக இருக்கிறாராம்.
காதலன் சித்தார்த் ராய் கபூரை மணக்க உள்ள வித்யாபாலனின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க அவரது சகோதரி பிரியா குடும்பத்துடன் வித்யாபாலன் குடியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே மும்பையில் குடியேறிவிட்டாராம்.
Comments
Post a Comment