Friday,16th of November 2012
சென்னை::கதாநாயகிகள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இருக்கிறார்கள். ஆனால் தமன்னா இதற்கு நேர்மாறாக உள்ளார்.
இதுகுறித்து அவரே சொல்கிறார். கதாநாயகிகள் பலர் அழகு கெட்டுவிடும் என பயந்து சாப்பிடாமல் பட்டினி கிடப்பதை பார்த்து இருக்கிறேன். ஆனால் நான் அப்படியல்ல. விரும்பியதையெல்லாம் சாப்பிட்டு விடுவேன். நிறைய சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்து சரியாக்கி கொள்வேன்.
நான் ஒரு சாப்பாட்டு பிரியை. எனக்கு பிடித்த ருசியான உணவுகளை பார்த்து விட்டு சும்மா இருக்க முடியாது. நான் ரொம்ப விரும்புவது ஐதராபாத் பிரியாணி, ஐதராபாத்துக்கு போகும் போதெல்லாம். ஓட்டல் ஓட்டலாக ஏறி பிரியாணி சாப்பிடுவேன். எந்த ஓட்டலில் ருசியான பிரியாணி கிடைக்கும் என்பதை தோழிகளிடம் கேட்டு தெரிந்து வைத்து இருக்கிறேன். அத்துடன் மீன் குழம்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தமிழ்நாட்டில் சாம்பார், இட்லியை விரும்பி சாப்பிடுவேன். எனக்கு சமைக்க தெரியாது. வீட்டில் அம்மாதான் சமைப்பார் அவர் கைப்பக்குவத்தில் தயாராகும் உணவுகள் ருசியாக இருக்கும். நன்றாக சாப்பிடுவேன். சமைக்க தெரியாவிட்டாலும் உப்பு, புளி குறைவாக இருந்தால் கண்டுபிடித்து விடுவேன். அம்மா சமைத்ததும் முதலில் எனக்கு கொடுத்து உப்பு காரம் சரியாக இருக்கிறதா? என்று பார்த்து சொல் என என்னிடம் தான் கேட்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment