செக் மோசடி வழக்கு : நடிகை புவனேஸ்வரிக்கு பிடிவாரன்ட்!

Friday,2nd of November 2012
சென்னை::செக் மோசடி வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மன்னார்குடி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் செல்வகுமார். பைனான்சியர். இவரிடம் நடிகை புவனேஸ்வரி 2 ஆண்டுக்கு முன்பு ரூ.13 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.  கடனுக்கு ஈடாக 6 மாதங்களுக்கு முன் செக் கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தியபோது அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை.

இதனை தொடர்ந்து புவனேஸ்வரி மீது செல்வகுமார் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. விசாரணைக்கு புவனேஸ்வரி ஆஜராகவில்லை. தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் புவனேஸ்வரிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டார். இது பற்றி செல்வகுமாரின் வக்கீல் சிங்காரவேலன் கூறுகையில், ‘தொடர்ந்து 2 முறை ஆஜராகாமல் இருந்ததால் புவனேஸ்வரியை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நீதிபதி  உத்தரவிட்டார்’ என்றார்.

Comments