ஆண்ட்ரியா அதிர்ச்சி: நிர்வாணமாக நடித்தேனா?!!!

Saturday,24th of November 2012
சென்னை::ஜீவா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண போஸ் கொடுத்து நடித்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. ஏற்கனவே இசையமைப்பாளர் அணிருத்தை உதட்டில் முத்தமிடும் படங்கள் இன்டர்நெட்டில் பரவியது.

இதனால் ஆண்ட்ரியா அதிர்ச்சியானார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் இந்த படத்தை யாரோ எடுத்து வெளியிட்டு விட்டனர். இதன் தொடர்ச்சியாக நிர்வாண போஸ் செய்தி வந்துள்ளது. ஓவியக் கல்லூரி மாணவர் படம் வரைவதற்காக இது போன்று போஸ் கொடுத்து நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து ஆண்ட்ரியாவிடம் கேட்ட போது நிர்வாண போஸ் என்பதெல்லாம் தவறான செய்திகள். என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிற வகையில் ஒரு காட்சியில் நடித்து இருக்கிறேன். அது என்ன என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது. ஆனால் அது நிச்சயம் பேசப்படும்.

இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.

Comments