Sunday,25th of November 2012
சென்னை::ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் இல்லை என்றால் வீட்டில் சும்மா இருப்பேனே தவிர வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க மாட்டேன் என்று நடிகர் கரண் பிடிவாதம் பிடிக்கிறாராம்.
கமல நடித்த நம்மவர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான கரண், தொடர்ந்து தனது நடிப்பு திறமையால் பல கதாபாத்திரங்களில் நடித்தார். பிறகு சில படங்களில் ஹீரொவாக நடித்த அவர், பிறகு கோடம்பாக்க முகவரியை தொலைத்துவிட்டு வீட்டில் சும்ம இருந்தார். விசாரித்ததில், "நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். இல்லையென்றால் சும்ம இருப்பேன்." என்று கூறியவருக்கு மீண்டு ஒரு வாழ்க்கை கொடுத்தது 'கொக்கி'. பிரபு சாலமன் இயக்கிய இப்படத்தில் ஹீரோவாக நடித்த கரண், தொடர்ந்து 'காத்தவராயன்', 'கருப்பசாமி குத்தகைதாரர்' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துகொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் நடித்த சில படங்கள் சரியாக போகததால், மீண்டும் கோடம்பாக்கத்தில் கரணை காணவில்லை.
இந்த நிலையில், சிலர் அவரை கதாபாத்திர வேடங்களில் நடிக்குமாறு அனுகுகிறார்களாம். இம்முறையும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். இல்லை என்றால், சும்ம இருப்பேன். என்று பிடிவாதமாக கூறிவிட்டாராம்
Comments
Post a Comment