பாரதிராஜாவின் இயக்கத்தில் "அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தை முடித்த கையோடு அருண் விஜய் ஜோடியாக "டீல்' படத்தில் ஒப்பந்தம் - கார்த்திகா!!!
Monday,5th of November 2012
சென்னை::பாரதிராஜாவின் இயக்கத்தில் "அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தை முடித்த கையோடு அருண் விஜய் ஜோடியாக "டீல்' படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டார் கார்த்திகா.
"கோ' படத்துக்குப் பின் நட்சத்திர இயக்குநர்கள் மற்றும் பிரபல நடிகர்களின் படங்களின் வாய்ப்புகளை மட்டுமே எதிர்பார்த்து காத்திருந்தவர், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். என்ன காரணம் என கார்த்திகா தரப்பில் கேட்டால், "" கோ' படத்துக்குப் பின் நிறைய பெரிய பட வாய்ப்புகள் கிடைத்தன. பொருத்தமில்லாத கதைகளால் நடிக்கவில்லை.
இப்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. பாரதிராஜா படம் வெளியானால் வேறு மாதிரியான இமேஜுக்குள் சிக்கி விடுவார். அதனால்தான் கமர்ஷியல் ப்ளஸ் ஆக்ஷன் கலந்த "டீல்' படத்தை ஒப்புக் கொண்டார். இனி தொடர்ந்து அதே மாதிரியான படங்களில் நடிக்க கார்த்திகா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
nice karthika
ReplyDeletehttp://tamils.com/picture-gallery/category/1453-susiq.html