உன் சமையல் அறையில்...: இளையராஜாவுடன் மீண்டும் பிரகாஷ் ராஜ்!!!

Monday,19th of November 2012
சென்னை::தோனி படத்துக்குப் பிறகு மீண்டும் இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்க்கிறார் பிரகாஷ் ராஜ். அதுவும் ஒரு இயக்குநராக!

தோனி படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பும் இயக்கமும், இளையராஜாவின் இசையும் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றன.

அடுத்து தமிழில் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். படத்துக்கு தலைப்பு உன் சமையல் அறையில். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக் இது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரகாஷ்ராஜ் இயக்கி வரும் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 5 பாடல்கள் இடம்பெறுகின்றனவாம்.

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜுடன் நடிக்கப் போகும் நடிகை... வயசானாலும் குலுங்கும் கவர்ச்சியுடன் உலா வரும் தபு!

Comments