Friday,23rd of November 2012
சென்னை::'துப்பாக்கி' படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜீத் விஜய் மற்றும் முருகதாஸை அழைத்து பாராட்டியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'துப்பாக்கி' சூப்பட் டூப்பட் ஹிட்டாகியுள்ள நிலையில், இயக்குநர் முருகதாஸுக்கும், விஜய்க்கும் பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் படம் பார்த்துவிட்டு முருகதாஸை பாராட்டினார்.
தற்போது இப்படத்தை பார்த்திருக்கும் அஜீத், முருகதாஸையும், விஜயையும் அழைத்து "கலக்கிட்டிங்க..." என்று பாராட்டினாராம்.
ஏ.ஆர்.முருக்தாஸை 'தீனா' படத்தின் மூலம் அஜீத் தான் இயக்குநராக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment