Tuesday,20th of November 2012
சென்னை::விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள் ளனர். மோகன்லால் ஏற்கனவே கமலுடன் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீசான விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்துள்ளார்.
விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம். விஜய் தற்போது ‘மதராசபட்டணம்’ டைரக்டர் விஜய் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
விஜயின் ‘துப்பாக்கி’ படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் சாதனை படைக்கிறது. இதையடுத்து படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு விஜய் விருந்து கொடுத்தார்.
Comments
Post a Comment