காதலை மறைந்தது ஏன்? என்றதற்கு பதில் அளித்தார் சிவா!!!:-தில்லு முல்லு“ படத்தில் நடித்தபோதுதான் ரஜினிகாந்த் திருமணம் நடந்தது. இப்போது நானும் அப்படத்தின் ரிமேக்கில் நடிக்கிறேன். இப்போது எனது திருமணம் நடக்கிறது!!!

Monday,5th of November 2012
சென்னை::காதலை மறைந்தது ஏன்? என்றதற்கு பதில் அளித்தார் சிவா. சென்னை 28, தமிழ் படம், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சிவா. இவர் தனது 5 வருட காதலி பிரியாவை மணக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரை இது பற்றி கேட்டபோது மறுத்துவந்தார். தற்போது உறுதி செய்திருக்கிறார். திருமணத்தை மறைத்தது ஏன் என்று கேட்டபோது, சிவா கூறியது: பிரியா இன்ஜினியரிங் பட்டதாரி. ஜெர்மன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். 5 வருடமாக இருவரும் காதலித்து வருகிறோம். இப்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். குடும்ப நிகழ்ச்சி ஒன்றில்தான் அவரை சந்தித்தேன். பின்னர் தொடர் சந்திப்பில் காதல் மலர்ந்தது. என்னை அவர் நகைச்சுவை நிறைந்த மனிதாக பார்க்கிறார். இதுநாள் வரை நாங்கள் சந்தோஷமாக காதலித்தோம். இந்த காதலால் என்னுடைய பெண் ரசிகைகளின் மனம் உடைந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் குடும்பம் பெரியது. அவர்களை சமாதானம் செய்ய வேண்டி இருந்ததால் காதல் பற்றி மறைத்தேன். இப்போது சமாதானம் ஆகிவிட்டார்கள். இன்னும் திருமண ஆடை கூட எடுக்கவில்லை. :தில்லு முல்லு“ படத்தில் நடித்தபோதுதான் ரஜினிகாந்த் திருமணம் நடந்தது. இப்போது நானும் அப்படத்தின் ரிமேக்கில் நடிக்கிறேன். இப்போது எனது திருமணம் நடக்கிறது.

Comments