நடிக்க அழைத்தவர்களை துரத்திய ஜி.வி.பிரகாஷ்!!!

Monday,5th of November 2012
சென்னை::சமீபகால சினிமாவில் பல டெக்னீசியன்களும் நடிகர்களாகி வருகிறார்கள். அந்த வரிசையில், பா.விஜய், சினேகன் போன்ற சில பாடலாசிரியர்கள் நடிகர்களாகி தோற்றுப்போனதை அடுத்து, மேலும் நடிக்கும் ஆசையில் இருந்த சில பாடலாசிரியர்கள் ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று ஒதுங்கிக்கொண்டனர். ஆனால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது சில இசையமைப்பாளர்களை டைரக்டர்களாகவே நடிக்க இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். அவர், அவர்பாட்டுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என்ற பலதரப்பட்ட மொழிகளில் படங்களுக்கு சீரியசாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் சில இயக்குனர்கள் உங்களுக்கு பொருத்தமாக ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருக்கு. நீங்க நடிச்சா படம் நூறு நாள் கண்டிப்பா ஓடும் என்று அவரை அசைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனதளவில் நடிப்பு ஆசை அவருக்குள் இருந்தபோதும், அதற்கு இது சரியான நேரம் அல்ல. பல பெரிய படங்களுக்கு இசையமைக்கும் இந்த நேரத்தில் கவனத்தை சிதறவிட்டால், இசையமைப்பாளராக பிடித்த இடம் பறிபோய் விடும் என்று நடிப்பாசையை மூட்டை கட்டி விட்டார். அதோடு, கால்சீட் கேட்டு துரத்திக்கொண்டிருந்த டைரக்டர்களையும், நடிகராவதை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறேன் என்று சொல்லி அவர்களை வலுக்கட்டாயமாக துரத்திக்கொண்டிருக்கிறார்.

Comments