பெண் இசை அமைப்பாளர்களுக்கு வாய்ப்பு குறைவு : பவதாரிணி வருத்தம்!!!

Tuesday,27th of November 2012
சென்னை::பெண் இசை அமைப்பாளர் களுக்கு வாய்ப்பு குறைவு தான் என்றார் பவதாரிணி. வேலு விஸ்வநாத் எழுதி இயக்கும் படம் ‘வெள்ளச்சி. பிண்டு, சுசித்ரா உன்னி நடிக்கின்றனர். கே.ஆனந்தன், கீதா தயாரிக்கின்றனர். இளையராஜா மகள் பவதாரிணி இசை அமைக்கிறார். அவர் கூறியதாவது: இப்படத்தின் கதையை இயக்குனர் சொன்னபோது மிகவும் பிடித்தது. காதலை மறைக்க விளையாட்டாக சொல்லும் வார்த்தையால் என்ன விபரீதம் நடக்கிறது என்பதுதான் கரு. நா.முத்துகுமார் பாடல் எழுதி உள்ளார். இப்படத்துக்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

எந்த படத்துக்கு நான் இசை அமைத்தாலும் அதை எனது தந்தைக்கு போட்டுக்காட்டுவேன். அதேபோல் அவர் இசை அமைக்கும் பாடல்களையும் எங்களிடம் போட்டுக்காட்டுவார். ‘அமிர்தம் உள்பட 5 படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். தற்போது ‘வெள்ளச்சி, ‘போரிட பழகு படங்களுக்கு இசை அமைக்கிறேன். ‘இளையராஜா மகளாக இருந்தும் அதிக படங்களுக்கு இசை அமைக்காதது ஏன்? என்கிறார்கள். பொதுவாக சினிமாவை பொறுத்தவரை தொழில் நுட்ப துறையில் பெண்களுக்கு வாய்ப்பு குறைவுதான். இசை அமைப்பாளர்கள் பட்டியலில் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் பெண்கள் இருக்கிறார்கள். எந்த வாய்ப்பையும் நான் கேட்டுப் பெறுவதில்லை. என் இசை, குரல் பிடித்து வருபவர்களுக்கு இசை அமைக்கிறேன், பாடுகிறேன்.

Comments