மகிழ்ச்சியில் த்ரிஷா!!!

Tuesday,27th of November 2012
சென்னை::தமிழ்நாட்டில் தமிழ் மட்டும் தெரின்ந்தால் பிழைப்பது கஷ்டம். ஆனால் ஆங்கிலமோ, இந்தியோ மட்டும் தெரிந்தால் மரியாதையும் அதிகம், வாழ்வதற்கான வழிகளும் அதிகம். பாருங்கள்... தமிழ் சினிமாவில் தமிழ் தெரியாத நடிகைகளுக்கு ஐந்து நட்சத்திர விடுதி, தமிழ் தெரிந்தால் மூன்று நட்சத்திரம்.

இப்படியொரு சூழலில் கான்வென்டில் படித்த, நட்சத்திர விடுதிகளில் புழங்கும் த்ரிஷா எனக்கு டமில் அவ்ளவா தெரியாது என்று சொல்வதில் என்ன வியப்பு இருக்கிறது? இயக்குனர்களும் படப்பிடிப்பு முடிந்ததும் த்ரிஷாவுக்கு டாட்டா காட்டுவதோடு சரி. டப்பிங் தியேட்டருக்கு அவரை அழைத்ததேயில்லை.

கமல்ஹாசன் மன்மதன் அம்பு படத்துக்காக த்ரிஷாவை டப்பிங் தியேட்டருக்கு அழைத்து தமிழை எப்படி சரியாக உச்சரிக்க வேண்டும் என்று கிளாஸ் எடுத்து திரிஷாவை சொந்தக்குரலில் டப்பிங் பேச வைத்தார். அந்த அனுபவத்தில் சமர் படத்துக்கும் திரிஷாவே டப்பிங் பேசியுள்ளார்.
சமர் படத்தில் நடித்தது திரிஷாவுக்கு மகிழ்ச்சியா இல்லையா என்பது தெரியாது. ஆனால் சொந்தக் குரலில் டப்பிங் பேசியது மகா சந்தோஷம் என்று தெரிவித்துள்ளார். விஷால் ஜோடியாக திரிஷா நடித்திருக்கும் இந்த ஆக்ஷன் படம் டிசம்பரில் வெளியாகும் என தெரிகிறது.

Comments