Monday,5th of November 2012
சென்னை::ஆதிபகவன்’ படத்தின் படவேலைகள் முடிவடைந்துள்ளதால் தற்போது மிகவும் சந்தோஷமாக உள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நீது சந்திரா நடித்துள்ளார். அமீர் இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை சமீபத்தில் கனடாவில் மிகப்பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டனர். தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் சென்றுகொண்டிருக்கின்றன.
படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆதிபகவன்’ படத்தில் நான் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தற்போது இப்படத்திற்கான டப்பிங் வேலைகளில் பிசியாக இருக்கிறோம். இது ரொம்பவும் ஜாலியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் இயக்குனர் அமீர் கூறும்போது, இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது. காதல் மற்றும் ஆக்ஷனும் கலந்து இருக்கும். உலகம் முழுவதும் சுற்றி இப்படத்தின் காட்சிகளை படமாக்கியுள்ளோம் என்று கூறினார்.
இப்படத்தை பொங்கல் அன்று திரைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Comments
Post a Comment