நகைச்சுவை படத்தில் ரம்யா நம்பீசன்!!!

Wednesday,7th of November 2012
சென்னை::சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராஜசேகர். இவர் இயக்கும் படம் ‘யா யா’. இதுபற்றி அவர் கூறியதாவது: ‘கலகலப்பு’ படத்துக்கு பிறகு சிவா, சந்தானம் இணைந்து நடிக்கின்றனர். ரம்யா நம்பீசன் ஹீரோயின். மனோபாலா, இளவரசு, தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு. எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பு.

‘கண்டேன்’ படத்துக்கு இசை அமைத்த விஜய் எபினேசர் இசை அமைக்கிறார். நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையாக இது உருவாகிறது. ‘யா யா’ என்றால் ஆங்கில பெயரா என்கிறார்கள். இது ஆங்கில பெயர் இல்லை. தமிழ் பெயர்தான். இதற்கு அர்த்தம் இருக்கிறது. படத்தில் வரும் ஹீரோ, ஹீரோயின் பெயர்களை இணைத்து இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. பாடல் காட்சிகள் மலேசியா, ஹாங்காங்கில் படமாக உள்ளது.

Comments