விஸ்வரூபம் படத்தின் பாடல்கள் சிடி வெளியாகும் முன்பே, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன!!!

Friday,23rd of November 2012
சென்னை::கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படத்தின் பாடல்கள் சிடி வெளியாகும் முன்பே, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களில் மூன்றை கமல் பாடியுள்ளார்.

சோனி நிறுவனம் இந்த பாடல் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல், படத்துக்கான தீம் பாடல். சூரஸ் கான் இதைப் பாடியுள்ளார்.

இந்தப் பாடலைத் தொடர்ந்து, துப்பாக்கி எங்கள் தொழில் எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை கமலும் பென்னி தயாளும் பாடியுள்ளனர்.

உன்னைக் காணாது நான் என்ற பாடலை கமலும் சங்கர் மகாதேவனும் பாடியுள்ளனர், அணு விதைத்த பூமியிலே என்ற பாடலை கமலுடன் நிகில் டிசோசா பாடியுள்ளார். விஸ்வரூபம் என்ற பாடலை ஷானே மென்டோன்ஸா ரீமிக்ஸ் செய்துள்ளார்.

இவற்றில் மூன்று பாடல்களை கவிஞர் வைரமுத்துவும், இரண்டு பாடல்களை கமல் ஹாஸனும் எழுதியுள்ளனர்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் இசை வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில்!!!

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் இசை வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.


விஸ்வரூபம் படம் எப்போதோ முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் படத்தின் இசை உரிமை மற்றும் படத்தின் விநியோக உரிமை பிரச்சினை தொடர்ந்ததால், படம் வெளியாவது இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

மேலும் இஸ்லாமிய அமைப்புகள் வேறு தொடர்ந்து இந்தப் படத்துக்கு மிரட்டல் விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சங்கர் எஷான் லாய் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

படத்தின் இசையை கடந்த நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்த நாளன்று, மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் பருவநிலை சரியில்லை என்று கூறி அப்போது அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார் கமல்.

இப்போது ஆடியோ உரிமையை சோனி வாங்கிவிட்டதால், இசை வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

Comments