Wednesday,14th of November 2012
சென்னை::துப்பாக்கி படத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள இப்படம் நேற்று ரிலீசானது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி உள்ளார். மும்பையில் குண்டு வைக்கும் தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் அழிப்பது போன்று திரைக்கதை உரு வாக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. 'துப்பாக்கி' படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
நீலாங்கரை கடற்கரையோரம் அவரது வீடு இருக்கிறது. அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுபோல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துப்பாக்கி படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
Comments
Post a Comment