கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,21st of November 2012
சென்னை::‘இரண்டாம் உலகம்’ படத்தில் முதல் பாதியில் துணிச்சலான கிராமத்துப் பெண்ணாகவும், இரண்டாம் பாதியில் டாக்டராகவும் நடிக்கிறார் அனுஷ்கா.

ஒலிம்பிக்கில் மெடல் வென்ற குத்து சண்டை வீராங்கனை மேரி கோம். அவரது ஸ்டைல், தோற்றம் பற்றி வீடியோவில் பார்த்து அறிந்த பிறகே ‘துப்பாக்கி’ படத்தில் காஜல் அகர்வால் குத்து சண்டை வீராங்கனையாக நடித்தாராம்.

ஞாயிற்றுகிழமையென்றால் வீட்டில் மட்டன் பிரியாணி செய்வது தாத்தா சிவாஜி குடும்பத்தில் கடந்த 50 வருட பாரம்பரிய வழக்கம் என்கிறார் ‘கும்கி’ ஹீரோ விக்ரம் பிரபு.

‘டெல்லி பெல்லி’ இந்தி படம் தமிழில் கண்ணன் இயக்கத்தில் ‘சேட்டை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் இப்படத்தின் டைட்டில் ‘நாட்டி பாய்ஸ்’.

இந்தியில் அமிதாப் நடித்த ‘சர்கார்’ உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களில் எழுதிய சில வசனங்கள் மறைந்த பால் தாக்ரே சொன்ன வார்த்தைகளை பின்பற்றி எழுதியது என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

ரஜினி, கமல் ஜோடியாக நடிக்க ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார் தமன்னா.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி’ படத்தில் நடித்த விஜய் அடுத்து ‘மதராஸ பட்டணம்’ இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கான ஷூட்டிங் ஸ்பெயின், ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

‘ஊ ல ல லா’ பட இயக்குனர் ஜோதி கிருஷ்ணா வரும் 23ம் தேதி ஐஸ்வர்யா என்பவரை மணக்கிறார். திருமணத்துக்கு பிறகு தெலுங்கு படம் இயக்க உள்ளார் ஜோதி கிருஷ்ணா.

மும்பையில் வசிக்கும் சரிகா, பாலிவுட்டில் 40 வயதுக்கு மேல் உள்ள ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறாராம்.

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த ‘பீட்சா’ படம் கன்னடம், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதற்கான உரிமை பெரிய விலைக்கு விற்றுள்ளதாம்.

‘ஒய் திஸ் கொலை வெறி ஹிட்டுக்கு பிறகு தன் மீதுள்ள எதிர்பார்ப்பை ‘எதிர்நீச்சல் படத்தில் நிறைவு செய்ய முடியும் என நம்புகிறாராம் இசை அமைப்பாளர் அனிரூத்.

டோலிவுட்டில் ராணா ஜோடியாக நடிக்கும் ‘கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார் நயன்தாரா. இதற்காக வீட்டில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறாராம்.

சம்பளமே வாங்காமல் ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க தயார் என கூறி உள்ளார் பாரதிராஜா. இவர் தற்போது ‘அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

‘டிஷ்யும் படத்தில் நடித்த 2 அடி 8 அங்குல குள்ள நடிகர் பக்ரு மலையாளத்தில் ‘குட்டியும் கோலும் என்ற படத்தை இயக்குகிறார். ஏற்கெனவே இவர் முழுநீள கமர்ஷியல் படத்தில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.

அமிதாப்பச்சன் நடித்த ‘சன்ஜீர் பட ரீமேக்கில் நடிக்கிறார் ராம் சரண் தேஜா. ஜோடி பிரியங்கா சோப்ரா. தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்றார் பிரியங்கா சோப்ரா.

Comments