Sunday,4th of November 2012
சென்னை::நடிகை ஐஸ்வர்யாராய் முதல் தடவையாக குழந்தை முகத்தை ரசிகர்களுக்கு காட்டினார். இவருக்கும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் 2007-ல் திருமணம் நடந்தது. கடந்த வருடம் நவம்பர் 16-ந்தேதி பெண் குழந்தையை பிறந்தது.
அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டனர். குழந்தையை பல மாதங்கள் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்த்தனர். சமீபத்தில் ஐஸ்வர்யாராய் வெளிநாட்டுக்கு குழந்தையுடன் சென்று வந்தார். அப்போது குழந்தை முகத்தை மார்போடு மறைத்து இருந்தார். போட்டோ கிராபர்களுக்கு குழந்தை முகத்தை காட்டவில்லை.
தற்போது முதல் தடவையாக தனது பிறந்தநாளையொட்டி குழந்தை முகத்தை ரசிகர்களுக்கும், பத்திரிகை போட்டோ கிராபர்களுக்கும் காட்டினார். பிறந்தநாளையொட்டி ஐஸ்வர்யாராய்க்கு அவரது கலைச் சேவையை பாராட்டி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
மும்பையில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் பிரான்ஸ் தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர் பங்கேற்று விருதை வழங்கினார். இதில் ஐஸ்வர்யாராய் மகள் ஆரத்யாவுடன் கலந்து கொண்டார். அப்போதுதான் குழந்தை முகத்தை வெளிக்காட்டினார். அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் போன்றோரும் இதில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment