Thursday,22nd of November 2012
சென்னை::இளையராஜாவின் இரண்டு மகன்களும் இசையமைப்பாளர்களாக திரையுலகில் ஜொலித்துக்கொண்டிருப்பதை தொடர்ந்து தற்போது அவருடைய மகள் பவதாரணியும் இனி இசையமைப்பாளராக ஜொலிக்கப் போகிறார்.
இதுவரை தனது குரலின் மூலம் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட பவதாரணி, இனி தனது இசையின் மூலம் கட்டிப்போட போகிறார். ஆம், 'போரிடப் பழகு' படத்திற்கு பவதாரணி தான் இசையமைப்பாளர்.
மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் டெல்லியைச் சார்ந்த தமிழ்ப் பெண்ணான நீலம்பரி ஹீரோயினாக நடிக்கிறார். மணல் கொள்ளை மாஃபியாவைப் பற்றிய படமாக உருவாகும் இப்படத்தை சேகர் பாரதி இயக்குகிறார். ப்ளு ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் திட்டக்குடி ம.பாலாஜி, மதுரை ரோஸ்மேரி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
பா.விஜய், சினேகன், கிருதயா ஆகியோர் வரிகளுக்கு, பவதாரணி மெட்டு அமைத்துகொண்டிருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Comments
Post a Comment