Tuesday,27th of November 2012
சென்னை::இந்த கதைக்கு நீண்ட பிளாஷ்பேக் உண்டு. தில்லு முல்லு நிறைந்தது என்பதால் போரடிக்காது.
இந்தியில் வசூலை வாரிக் குவிக்கும் சன் ஆஃப் சர்தார் படம் தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மரியாத ராமண்ணாவின் ரிமேக். இது பலருக்கும் தெரிந்திருக்கும். மரியாத ராமண்ணாவின் மூலம் பஸ்டர் கீடனின் மௌனப்படமான தி ஹாஸ்பிடாலிட்டி. மாஸ் ஹீரோக்கள் நடிப்பதால்தான் ராஜமௌலியின் படங்கள் ஓடுகின்றன என்ற விமர்சனம் எழுந்த போது பஸ்டர் கீடனின் படம்தான் ராஜமௌலிக்கு கை கொடுத்தது. காமெடி நடிகர் சுனிலை வைத்து மரியாத ராமண்ணாவை இயக்கி அதை சூப்பர்ஹிட்டாக்கினார்.
இந்தியிலும் இதன் ரிமேக் பெரிய வெற்றியை ஈட்டியதால் தமிழில் ரிமேக் செய்யலாமே என பிவிபி சினிமாவுக்கு தோன்றியிருக்கிறது. இதில் நடிக்க அவர்களின் சாய்ஸ் சந்தானம். உண்மையில் சந்தானத்துக்கென்றே தைத்த சட்டைதான் இந்த கதை.
காமெடியில் கலக்கியெடுக்கும் சந்தானத்துக்கு சேட்டை படக்குழு காமெடி சூப்பர்ஸ்டார் என்ற புதிய பட்டத்தை தந்திருக்கும் நேரத்தில் பிவிபி சினிமாவின் இந்த வாய்ப்பும் கதவை தட்டியிருக்கிறது.
காமெடி சூப்பர்ஸ்டார்
Comments
Post a Comment