ரஜினி பிறந்தநாள் - குவிகிறது பரிசு!!!

Monday,26th of November 2012
சென்னை::தனது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி ரசிகர்களுக்கு என்ன பரிசு தரப்போகிறார் தெரியவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு மற்றவர்கள் அளிக்கும் பரிசு குவிந்து வருகிறது.

12-12-12 அன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி படத்தை 3டி யில் வெளியிடுகிறது ஏவிஎம் நிறுவனம். படத்தின் சுவாரஸியமில்லாத காட்சிகளை எடிட் செய்து கச்சிதமாக இந்த 3டி வெளியாகிறது. ரஜினி ரசிகர்களுக்கு ஏவிஎம் மின் இந்த பிறந்தநாள் பரிசு சிறப்பானதாக அமையும்.

ரஜினியின் தீவிர பக்தர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் ரஜினியின் பிறந்தநாளில் ஆல்பம் ஒன்றை வெளியிடுகிறார். ரஜினி சார் அற்புதமானவர், அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த அவரது பிறந்தநாளில் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறேன் என்று லாரன்ஸ் கூறியுள்ளார். இந்த ஆல்பத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

ரஜினி 3டி படம், ரஜினி பற்றிய ஆல்பம்... ரஜினி ரசிகர்களுக்கு இந்த பிறந்தநாள் விசேஷமாக இருக்கப் போகிறது.

Comments