Wednesday,14th of November 2012
சென்னை::நயன்தாராவுக்கு பதிலாக சூர்யாவோடு குத்தாட்டம் ஆடுகிறார் அஞ்சலி. சூர்யா, அனுஷ்கா நடிக்க ஹரி இயக்கிய படம் ‘சிங்கம்’. இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் சூர்யா, அனுஷ்கா, ஹரியுடன் ஹன்சிகா கூட்டணி சேர்ந்திருக்கிறார். இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்துக்காக சூர்யாவுடன் நயன்தாரா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் சூர்யாவின் கால்ஷீட்டுக்கும், நயன்தாராவின் கால்ஷீட்டுக்கும் பொருத்தமான தேதி அமையாததால் அப்பாடலுக்கு வேறு ஹீரோயினை தேடினார்கள்.
‘அங்காடி தெரு’, முதல் ‘எங்கேயும் எப்போதும்’ வரை கிளாமர் வேடத்துக்கு இடம்கொடுக்காமல் இருந்த அஞ்சலி, ‘கலகலப்பு’ படம் முதல் கிளாமர் வேடங்களில் தூள் கிளப்பி வருகிறார். இதையடுத்து கண்ணன் இயக்கத்தில் ‘சேட்டை’ படத்துக்காக ஆர்யாவுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்து அசத்தி உள்ளார். தற்போது ‘சிங்கம் 2’ படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட அஞ்சலி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதற்காக இவருக்கு பெரிய சம்பளம் தரப்பட்டுள்ளது. விரைவில் சூர்யா, அஞ்சலி ஆடும் குத்தாட்ட பாடல் படமாக உள்ளது.
Comments
Post a Comment