இதுவரை கவர்ச்சி, குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, தற்போது முற்றிலும் கவர்ச்சிக்கு தாவியுள்ளார்!
Monday,19th of November 2012
சென்னை::‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. இவர், ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால், என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இதுவரை கவர்ச்சி, குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, தற்போது முற்றிலும் கவர்ச்சிக்கு தாவியுள்ளார். தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் ‘சந்திரா’ என்ற படத்தில் துணிச்சலாக ஆடைகுறைப்பு செய்துள்ளார். சரித்திர கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. ஸ்ரேயா மகாராணி வேடத்தில் வருகிறார்.
பாடல் காட்சிகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடித்துள்ளார். துணை நடிகர், நடிகைகளை வெளியேற்றி இந்த கவர்ச்சி சீன்களை படமாக்கியுள்ளனர். அரசகுல வழித்தோன்றலாக இன்றைய காலகட்டத்தில் வாழும் ராணி நாகரீகத்தோடு ஒன்ற தவிக்கும் மனப்போராட்டமே கதை.
அதிக செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். விமானத்திலும் பாடல் காட்சிகள் படமாகி உள்ளது. இப்படத்தை ரூபா அய்யர் இயக்கியுள்ளார். பிரேம் நாயகனாக நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராமன், விவேக், சுகன்யா விஜயகுமார் போன்றோரும் நடித்துள்ளனர். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Comments
Post a Comment