Saturday,24th of November 2012
சென்னை::எனக்கு ஜோடி சேர்ந்த ஹீரோயின்களில் ஹன்சிகாதான் அழகு. அவர் ஒரு தேவதை என்றார் சிம்பு. நயன்தாரா, த்ரிஷா, திவ்யா, சனா கான் உள்பட சமீபத்தில் வெளிவந்த ‘போடா போடி வரலட்சுமி வரை சிம்புவுக்கு ஜோடியாக பல ஹீரோயின்கள் நடித்திருக்கின்றனர். தன்னுடன் நடித்த ஹீரோயின்களில் அழகானவர் ஹன்சிகாதான் என கூறியிருக்கிறார் சிம்பு. இது பற்றி அவர் கூறியதாவது: ஹன்சிகா தேவதைபோன்று அழகானவர். யாரையும் திரும்பி பார்க்க வைப்பார். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றும் பெண்களில் அவரும் ஒருவர்.
ஆரம்ப காலத்தில் ஹன்சிகா நடித்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத்தராவிட்டாலும் நாளுக்கு நாள் அவரது ரசிகர் வட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனது எல்லா படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள்தான் அதிகம். அடுத்து நான் நடிக்கும் வேட்டை மன்னன், வாலு இரண்டு படங்களிலும் எனக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவைத்தான் தேர்வு செய்திருக்கிறேன். அவரது அழகும், சொக்க வைக்கும் இளமை இரண்டையும் மனதில் வைத்துத்தான் அவரை தேர்வு செய்தேன். அவர் ஒரு தேவதை.
Comments
Post a Comment