Saturday,3rd of November 2012
சென்னை::பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தும் இந்தி பேச முடியாமல் தவிப்பதாக கூறினார் கேத்ரினா கைப். ஷாருக்கான், சல்மான் கான் என முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருப்பவர் கேத்ரினா கைப். லண்டனில் பிறந்து வளர்ந்த கேத்ரினா கடந்த 10 வருடமாக இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இந்தியில் சரளமாக பேச முடியாமல் தவிக்கிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற் றார். அப்போது ஒரு பெண் நிருபர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். உடனே கேத்ரினா, ‘இந்த கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்கிறேன்.
எனக்கு அதுதான் வசதியாக இருக்கிறது’ என்ற படி பதில் அளித்தார். இதுபற்றி கேத்ரினா கூறும்போது, ‘இந்தி படங்களில் 10 வருடமாக நடித்து வந்தாலும் இந்தியில் சரளமாக பேசுவதற்கு தயக்கம் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேசுவதற்குத் தான் எனக்கு எளிதாக இருக்கிறது. 24 மணி நேரமும் என்னுடன் இந்தி பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடன் பேசிப் பழகியும் சில கேள்விக்களுக்கு இந்தியில் பதில் சொல்லத் தெரியவில்லை. வேற்று மொழிகளில் நடிக்கும் எல்லா ஹீரோயின்களுக்கும் இப்படியொரு பிரச்னை இருக்கிறது. சரளமாக இந்தி பேசுவதற்கு இன்னும் பயிற்சி எடுத்து வருகிறேன்’ என்றார்.
Comments
Post a Comment