Tuesday,13th of November 2012
சென்னை::இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார் வடிவேலு. நகைச்சுவை நடிகர் வடிவேலு தனக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு கோலிவுட்டில் வலம் வந்தார். இப்போது 1 வருட ஓய்வுக்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது பற்றி வடிவேலு கூறியதாவது: இன்னும் சினிமா களத்தில்தான் இருக்கிறேன். இண்டஸ்ரியைவிட்டு எங்கும் போய்விடவில்லை. படங்களில் நடிக்காமல் இருந்த ஓய்வு நாட்களில் எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் பொழுதை கழித்தேன். சினிமாவில் பிஸியாக இருந்தபோது பார்க்க முடியாமல்போன படங்களை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தேன். அப்போது என்னை சந்தித்து ரசிகர்கள் படங்களில் என்னை பார்க்காதது பற்றி தனது வருத்தத்தை தெரிவித்தார்கள். இப்போது நிலைமை சீரடைந்துவிட்டது. சினிமாவை நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். இயக்குனர்களிடம் எப்போதும் தொடர்பிலேயே இருந்தேன்.
கே.எஸ்.ரவிகுமார் சமீபத்தில் ‘ஆப்ரிகாவில் வடிவேலுÕ என்ற ஸ்கிரிப்டை எனக்கு கூறினார். பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன். இது எனக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. எனது ரசிகர்களை ஏமாற்றமாட்டேன். ஆப்ரிகாவில் இதன் ஷூட்டிங் நடக்க உள்ளது. ‘இம்சை அரசன்Õ படத்தின் 2ம் பாகம் படத்திலும் நடிக்க உள்ளேன், சந்தானம் பற்றி கேட்கிறார்கள். சினிமா துறை ஒரு கடல். திறமையானவர்களுக்கு எப்போதும் திரையுலகில் இடம்மிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனக்கு போட்டி நான்தான். விஷால் நடிக்கும் ‘பட்டத்து யானை படத்தில் நடிக்க மறுத்தீர்களா என கேட்கிறார்கள். அந்த படததில் நடிப்பது தொடர்பாக யாரிடமும் நான் பேசவில்லை. இவ்வாறு வடிவேலு கூறினார்.
Comments
Post a Comment