Friday,16th of November 2012
சென்னை::நடிகர் அஜித் ஒரு கார்பந்தய வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கார் பந்தய விபத்தில் சிக்கி பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டார்.
இந்த நிலையில், தற்போது பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதில், அஜித்துடன் ஆர்யா, ரனா தகுபாட்டி, நயன்தாரா, டாப்ஸி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்த போது, ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு தாவுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு தாவும் போது, அவர் பேலன்ஸ் இழந்து கீழே விழுந்தார். இதில், அவரது வலது கால் முட்டியில் பயங்கர அடி பட்டுவிட்டது. உடனடியாக படக்குழுவினர் அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அஜித்தை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவரது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆனால், தற்போது முதலுதவி மட்டும் செய்யுமாறும், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிய பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, நடிக்க வந்திருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருக்கிறார் அஜித். இதேக் காலில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment