Thursday,29th of November 2012
சென்னை::ஜீவா நடித்த படங்களிலேயே கொஞ்சம் டபுள் மீனிங் படம் என்றால் அது 'சிங்கம் புலி' படம் தான். இதில் இரட்டை வேடத்தில் நடித்த ஜீவா, ஒரு கதாபாத்திரத்தில் நல்லவராகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் பெண்களை ஏமாற்றும் விலானாகவும் நடித்திருந்தார்.
சாய்ரமணி என்ற புதுமுக இயக்குநர் இயக்கிய இப்படம், ஜீவாவின் சினிமா கேரியரில் ஒரு மாறுபட்ட படமாக அமைந்தது. தற்போது சாய்ரமணி மீண்டும் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இதிலும் ஜீவா தான் ஹீரோ.
சிவா மனசுல சக்தி, சிங்கம் புலி, வந்தான் வென்றான், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட படங்களில் ஜீவாவுடன் இணைந்து நடித்த சந்தானம் தொடர்ந்து இப்படத்திலும் ஜீவாவுடன் இணைகிறார். இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகளில் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment