Tuesday,13th of November 2012
சென்னை::இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் லட்சுமிராய். ‘ஒன்பதுல குருÕ படத்தை எழுதி இயக்கும் பி.டி.செல்வகுமார் கூறியதாவது:
கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கும் 4 இளைஞர்கள் அதன்பிறகு இன்னொரு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது அந்த சூழல் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை நகைச்சுவை ததும்ப கதை கூறுகிறது. வினய், சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் நண்பர்களாக நடிக்கின்றனர். இதில் இருவித கெட்டப்பில் நடிக்கிறார் லட்சுமி ராய். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார் மந்த்ரா. கீதா சிங், ரூபாஸ்ரீ, சோனா, மனோபாலா, ஷாம்ஸ், சித்ரா லட்சுமணன், சாமிநாதன், லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, படவா கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார்.
இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகும் மந்த்ராவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதை கூறியபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். ‘இப்படம் என்னை கோலிவுட்டில் இன்னொரு ரவுண்ட் வரவழைக்கும்Õ என்று கூறினார். பி.செல்லத்துரை ஒளிப்பதிவு. ‘முகமூடி‘ கே இசை. எஸ்.சிவகுமார், ஆர்.சிவகுமார் தயாரிப்பு. இவர்கள் விஜய் நடித்த ‘நண்பன்Õ, ‘துப்பாக்கிÕ படங்களின் விநியோகஸ்தர்கள்.
Comments
Post a Comment