Wednesday,28th of November 2012
சென்னை::மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் ‘டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன். தமிழில் வந்த ‘உருமி’ படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார்.
வித்யாபாலனுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. யு.டி.வி. தலைமை அதிகாரி சித்தார்த் ராய் கபூரை மணக்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி மும்பையில் நடக்க உள்ளது.
வித்யாபாலன் சென்னையை சேர்ந்தவர். எனவே தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். முன்னதாக 11-ந் தேதி பஞ்சாப் முறைப்படி திருமண சடங்குகள் நடக்கின்றன. சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. தமிழ் கலாசாரம் மீது வித்யாபாலனுக்கு மிகுந்த பற்று உள்ளது. எனவே தான் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்.
முகூர்த்த பட்டு புடவைகளை காஞ்சீபுரத்தில் இருந்து வாங்கியுள்ளார். திருமணத்தில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். திரையுலக பிரமுகர்கள் மிலன் லூத்ரியா, விஷால் பரத்வாஜ், ராஜ்குமார் குப்தா, பால்கிரக்தா, துச்சார்கபூர் ஆகியோரும் அழைக்கப்பட்டு உள்ளனர். திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடக்கின்றன.

Comments
Post a Comment