Monday,19th of November 2012
சென்னை::நயன்தாரா தன்னை பற்றி அவதூறாக பேசி வருகிறார் என்று பிரபுதேவா எரிச்சல் படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நான் மீண்டு வந்துவிட்டேன். இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். காலம்தான் எனக்கு ஆறுதல் தருகிறது என்றெல்லாம் நயன்தாரா பேசி வருகிறார். இதன்மூலம் தன்னை அவர் மறைமுகமாக தாக்கி வருவதாக பிரபுதேவா கருதுகிறார்.
காதலை முறித்து ஏமாற்றி விட்டதாக தன்மேல் அவதூறு பரப்புவதாகவும் நினைக்கிறார். நெருக்கமானவர்களிடம் இதுபற்றி சொல்லி அவர் புலம்புவதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாரா நடித்துள்ள ‘கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்’ என்ற தெலுங்கு படம் வருகிற 30-ந்தேதி ரிலீசாகிறது. இதில் ராணாவுடன் நயன்தாரா கவர்ச்சியாக நடித்துள்ளார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கிசுகிசுக்கப்படுகிறது. இதுவும் பிரபுதேவாவை ஆத்திரமூட்டி உள்ளது.
இந்திப்பட வேலைகளுக்காக பிரபுதேவா மும்பையில் தங்கியுள்ளார். ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இந்த படத்தை விளம்பரப்படுத்த நயன்தாராவும், ராணாவும் ஜேடியாக மும்பை செல்ல உள்ளனர். அவர்கள் வரும்போது மும்பையில் இருக்க கூடாது என்று பிரபுதேவா அங்கிருந்து வெளியூருக்கு கிளம்புகிறாராம்.
பிரபுதேவாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவே நயன்தாரா கவர்ச்சிக்கு மாறி மற்ற நடிகர்களுடன் நெருங்கி பழகுவதாகவும் கிசுகிசுக்கின்றனர்.
Comments
Post a Comment