Saturday,3rd of November 2012
சென்னை::நிலம் புயலில் ‘கடல்Õ படத்தின் ஷூட்டிங் நடத்தினார் மணிரத்னம். தமிழகத்தை நிலம் புயல் கடந்த புதன் கிழமை மிரட்டியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சினிமா ஷூட்டிங் மற்றும் சில தியேட்டர்களில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இயக்குனர் மணிரத்னம் ‘கடல்Õ என்ற படத்தை இயக்கி வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி ஜோடியாக நடிக்கின்றனர்.
இப்படத்தின் கிளைமாக்ஸுக்காக புயல் காட்சி படமாக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். இந்நிலையில் நிலம் புயல் வீசியதை பயன்படுத்திக்கொண்டார். புயல் காற்றால் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்ட காசிமேடு பகுதிக்கு கேமராமேன் ராஜீவ் மேனனுடன் சென்ற மணிரத்னம் கொட்டும் மழையில் கடற்கரை பகுதியில் வீசிய புயல் மற்றும் அலையின் சீற்றத்தை படமாக்கினார். ஒரு மணிநேரம் ஷூட்டிங் நடந்தது. இதுபற்றி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘புயல் வீசிய நேரத்தில் Ôகடல்Õ பட ஷூட்டிங் கில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம்Õ என்று குறிப்பிட்டுள்ளார்
Comments
Post a Comment