Tuesday,27th of November 2012
சென்னை::திருமணம் செய்துகொள்ளும்படி பாட்டி வற்புறுத்துகிறார். ஆனால், இதில் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறேன்’ என்கிறார் நடிகை பிரியா ஆனந்த். ‘வாமனன்’, ‘நூற்றெண்பது’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ போன்ற படங்களில் நடித்தவர் பிரியா ஆனந்த். இவர் அடுத்து பிரியதர்ஷன் இயக்கும் ‘ரங்கிரிஸ்’ என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே, பிரியாவை திருமணம் செய்துகொள்ளும்படி அவரது பாட்டி வற்புறுத்துகிறாராம். இதுபற்றி பிரியா ஆனந்த் கூறியதாவது: எனது பாட்டியை மிகவும் நேசிக்கிறேன். அவர் என்றால் எனக்கு உயிர். அவர்தான் எனக்கு எல்லாம். எனக்கு வரப்போகும் கணவர் என் பாட்டியை நன்கு புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நான் மணப்பேன். யாரையாவது காதலிக்கிறீர்களா என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நான் தனி ஆளாகத்தான் இருக்கிறேன். இப்போது நடிப்பு மீதுதான் எனது கவனம் முழுவதும் இருக்கிறது. ஆனால், திருமணம் செய்துகொள்ளும்படி என்னை பாட்டி வற்புறுத்துகிறார். ஒரு பெண்ணின் வாழ்வை முழுமையாக்குவது ஒரு ஆண்தான் என்று அவர் கூறுகிறார். நடிப்பா, திருமணமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறேன்.
Comments
Post a Comment