Thursday,15th of November 2012
சென்னை::'சென்னை 28' படத்தில் நடித்தவர் சிவா. 'சரோஜா', 'தமிழ்படம்', 'வா', 'கலகலப்பு' போன்ற படங்களிலும் நடித்தார்.
சிவாவுக்கும், என்ஜினீயரிங் பட்டதாரி பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. 5 வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தார்கள்.
சிவா - பிரியா திருமணம் இன்று காலை 10.30 மணிக்கு எழும்பூரில் ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. வேதமந்திரங்கள் ஓத மணப்பெண் கழுத்தில் தாலிகட்டினார். உறவினர்கள், திரையுலகினர் அட்சதை தூவி வாழ்த்தினர்.
நடிகர் அஜீத் மனைவி ஷாலினியுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். நடிகர்கள் பாக்யராஜ், விமல், வைபவ், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டைரக்டர் பத்ரி, ஆர்.எஸ். சிவாஜி, தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.
Comments
Post a Comment