ஹீரோவுடன் குத்தாட்டம் போட ஷூட்டிங்கை நிறுத்தினார் அசின்!!!

Thursday,29th of November 2012
மும்பை::ஹீரோவுடன் கவர்ச்சி நடிகை குத்தாட்டம் போட்டபோது தானும் ஆட வேண்டும் என்று முரண்டு பிடித்தார் அசின். பிறகு அவர் ஆடியகாட்சி படமானது. அக்ஷய்குமார் ஜோடியாக அசின் நடிக்கும் இந்திபடம் ‘கில்லாடி 786’. இப்படத்துக்காக
‘பால்மா’ என்ற பாடலில் கவர்ச்சி நடிகை கிளாடியா சியல்சாவுடன் அக்ஷய் குமார் நடனம் ஆடுவதுபோன்றும். அதை பொறாமையுடன் அசின் பார்ப்பதுபோலவும் காட்சி அமைக்கப்பட்டது. இதற்காக மும்பை ஸ்டுடியோவில் கண்கவர் பிரமாண்ட செட் போடப்பட்டது. பாடல் காட்சி தொடங்கியது. அசின் அதை ரசிப்பதுபோல் சீன் எடுத்தார் இயக்குனர். திடீரென்று எழுந்த அசின். காட்சியை நிறுத்தும்படி கூறினார்.

ஷாக் ஆன இயக்குனர் அருகில் வந்து, ‘என்ன விஷயம்’ என்று கேட்டபோது, ‘இந்த பாடலை ஏன் எனக்கு முதலிலேயே கேட்க கொடுக்கவில்லை. பாடல் இவ்வளவு சூப்பராக இருக்கிறது. நிச்சயம் ஹிட்டாகும். அதில் ஹீரோவுடன் நான் ஆடாமல் வேறு நடிகை மட்டும் ஆடினால் நன்றாக இருக்காது. எனவே காட்சியை மாற்றுங்கள். நானும் அந்த பாடல் காட்சியில் ஆடுவதுபோல் சீனை அமையுங்கள்’ என்றார். இதைக் கேட்டு இயக்குனர் கையை பிசைந்தபடி நின்றார். ஆனால் அசின் பிடிவாதம் பிடித்தார். இதையடுத்து அதேபாடலில் கனவு காட்சியில் அக்ஷய்குமாருடன் அசினும் நடனம் ஆடுவதுபோல் படமாக்கினார். இதுபற்றி பட தயாரிப்பாளர் ராகேஷ் உபாத்யாயிடம் கருத்துகேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

Comments