‘சமர்’ படத்தில் திரிஷா சொந்த குரலில் டப்பிங்:சொந்த குரலில் டப்பிங் பேச கமல் எனக்கு பயிற்சி அளித்தார்: திரிஷா!!!
Monday,26th of November 2012
சென்னை::விஷால் ஜோடியாக நடித்த ‘சமர்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது டப்பிங் ரீரிகார்டிங் பணிகள் நடக்கின்றன. தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’ ஜீவாவுடன் ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வருகிறார்.
‘சமர்’ படத்தில் திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விஷாலுடன் ‘சமர்’ படத்தில் நான் சொந்த குரலில் டப்பிங் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. எனது குரலில் டப்பிங் பேசுவதற்கு கமல்தான் காரணம். அவர்தான் என்னை இதற்காக தயார்படுத்தினார். கமலுடன் ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடித்துக் கொண்டு இருந்த போது எல்லா படங்களிலும் சொந்த குரலில் டப்பிங் பேசுவதற்கு எனக்கு பயிற்சி அளித்தார்.
தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார். டுவிட்டரில் 4 லட்சத்துக்கும் மேல் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இது சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு திரிஷா கூறினார்.
Comments
Post a Comment