Friday,23rd of November 2012
சென்னை::நடிகர்கள் இசையமைப்பதும், இசையமைப்பாளர்கள் நடிப்பதும் தமிழ் சினிமாவில் சாதரண விஷயம் தான் என்றாலும், இளையராஜா நடிப்பது என்பது ஆச்சரியமான விஷயம் தான். தான் இசையமைக்கும் படங்களிலும், தனது மகன்கள் இசையமைக்கும் படங்களில் மட்டுமே பாடல் பாடும் இளையராஜ ஒரு படத்தில் நடிக்கப் போகிறாரா! என்றால் நம்பவே முடியவில்லை.
ஆனால், அவர் நடிக்கப் போவது வேறு யாருடைய படமும் அல்ல, அவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா இயக்கும் படம் தான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வந்த யுவன் சங்கர் ராஜாவுக்கு தற்போது படம் இயக்கும் ஆசை வந்துவிட்டது. அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் யுவன், கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறாராம்.
இசையில் செஞ்சூரி போட்டிருக்கும் யுவன், தான் இயக்கும் படத்தில் தனது தந்தை இளையராஜாவை நடிக்க வைக்கப் போவதாக கோடம்பாக்க ஜோஷியர்கள் சொல்கிறார்கள். அப்படி இளையராஜா நடிக்க வில்லை என்றாலும், இந்த படத்தில் அவருடைய குடும்பத்தினர்களான வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் போன்றவர்கள் கண்டிப்பாக நடிப்பார்களாம்.
இசை சம்மந்தமாகவும், அல்லது சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படத்தை இயக்க யுவன் திட்டமிட்டிருக்கிறாராம்.
Comments
Post a Comment