'தல' தலைப்புக்கு 'தல' எதிர்ப்பு!!!

Saturday,24th of November 2012
சென்னை::அஜித் ரசிகர்கள் அவரை செல்லமாக 'தல' என்று அழைப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதனை படத்திற்குத் தலைப்பாக வைப்பதா? கூடாது என்று முட்டுக்கட்டையை 'தல'யே போட்டுள்ளதாக தெரிகிறது.

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் தலைப்பிடப்படாத படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்திற்கு தல என்று தலைப்பு வைக்கலாம் என்று எழுத்தாளர் சுபா பரிந்துரை செய்ததாக தெரிகிறது.

ஆனால் கதைக்குப் பொருத்தமான தலைப்பை தேர்வு செய்து வையுங்கள், தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என்று தல கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

'தல' யின் மதிப்பு மேலும் உயர்ந்து இனி 'பெரிய தல' என்று அழைக்கப்பட்டாஉம் ஆச்சரியப்படுவதற்கில்லை

Comments