மனிஷா மனதை கொய்வாரா?!!!

Friday,2nd of November 2012
சென்னை::ஆள் எவ்வளவு அழகாக இருந்தாலும் க‌ரியை பூசிஇ தலையில் சட்டியை கவிழ்த்துவிடுவதுடன் பாலாவின் வன்முறை எபிசோட் ஆரம்பிக்கும். அவரளவுக்கு இல்லையென்றாலும் பாலா‌ஜி சக்திவேலும் ஒரு வரைமுறை வன்முறையாளர்தான். வழக்கு எண்ணில் நடித்த மனிஷா எவ்ளோ அழகு. ஆனால் கண்டிப்பாக மேக்கப் கூடாது என்று எக்ஸ்போஸாக வேண்டிய அழகை எக்சாஸ்ட் ஃபேன் வைத்து ஓட்டியவர். அதற்கு வட்டியும் முதலுமாக ஆதலால் காதல் செய்வீர் படத்தில் மனிஷாவை காட்டியிருக்கிறாராம் சுசீந்திரன்.

யதார்த்தம் இலுப்பைப்பூ என்று இரண்டு மூன்று படங்களை ஒப்பேற்றிய சுசீந்திரனுக்கு ராஜபாட்டையில் விழுந்தது பலத்த அடி. இவ்வளவுதானா சரக்கு என்று உடனிருந்தவர்களே கமெண்ட் செய்தனர். இழந்த ம‌ரியாதையை மீட்க அவர் கையிலெடுத்திருக்கும் இளமை ஆயுதம்தான் இந்த ஆதலால் காதல் செய்வீர்.

லயோலா கல்லூ‌ரியில் படித்துக் கொண்டிருந்த சந்தோஷ் என்ற டீன் ஏஜ் மாணவனை கதாநாயகனாக்கியிருக்கிறார். அவருடன் லயோலா கல்லூ‌ரியில் ரகசியமாக சஞ்ச‌ரித்து யூத் மொழிகளை கற்று அதனை படத்தில் பயன்படுத்தினாராம். நாயகி ம‌னிஷா. பாலா‌‌ஜி சக்திவேல் நோ பார்க்கிங் போர்ட் போட்ட ஏ‌ரியாவையெல்லாம் டூ வே பாதையாக திறந்துவிட்டிருக்கிறார் (அதாம்பா கவர்ச்சியா நடிச்சிருக்கிறாராம்).

இந்தப் படத்துக்குப் பிறகு தனது முதல்பட இமே‌‌ஜ் விலகி கிளாமர் இமே‌‌‌ஜ் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். இந்த மனிஷா மனதை கொய்வாரா என்பதை படம் வந்த பிறகு தெ‌ரிந்துவிடும்.

Comments