Wednesday,21st of November 2012
சென்னை::காதல் ஜோடிகள் பிரச்னையை அலசும் கதையாக உருவாகிறது ‘கெஸ்ட். இயக்குனர் லிங்குசாமியின் உதவியாளர் ராஜா கார்த்திக் எழுதி இயக்கும் படம் ‘கெஸ்ட். இதுபற்றி அவர் கூறியதாவது: குடும்பத்தினர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்துக்கு சமமாக இன்றைக்கு காதல் திருமணங்களும் நடக்கின்றன. உருகி உருகி காதலிக்கும் ஜோடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தருணமாக அதை நினைக்காமல் பொழுதுபோக்கில்தான் கவனம் செலுத்துகின்றனர். எதிர்ப்புடனோ அல்லது எதிர்ப்பில்லாமலோ அவர்கள் திருமணம் நடக்கிறது. அதன்பிறகும் பரஸ்பரம் புரிந்துகொள்ளாமல் வாழ்கின்றனர். இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் பிரச்னை தீவிரமடைகிறது. மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருவரின் வாழ்வில் ஒரு பெண்ணும், வாலிபனும் நுழைகின்றனர். இதனால் பிரச்னை வலுக்கிறது. இந்த கதாபாத்திரங்களை மறைமுகமாக ஒருவன் கண்காணிக்கிறான். அதன் முடிவு என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ். ஹரிஸ் கல்யாண், பூனம் கவுர், ஜியா சித்திக், பரணி, சிங்கம்புலி, சாம்ஸ் நடிக்கின்றனர். நிவாஸ் ஒளிப்பதிவு. ராஜ்-ககானி இசை. மூர்த்தி ஸ்ரீனிவாசலு, ஏ.திருமால் ரெட்டி தயாரிப்பு. இவ்வாறு ராஜா கார்த்திக் கூறினார்.
Comments
Post a Comment