Wednesday,21st of November 2012
சென்னை::நடிகை வித்யா பாலனுக்கும், யு.டி.வி நிறுவனத்தின் நிர்வாகி சித்தார்த் ராய் கபூருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான விதயா பாலன், குரு, பரினீதா, பா, கஹானி, தி டர்ட்டி பிக்சர் உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்திருக்கிறார். தி டர்ட்டி பிக்சர்ஸ் மூலம் சிறந்த நடிகைக்கான தேசி விருது பெற்ற இவருக்கும், யு.டி.வி நிறுவனத்தின் நிர்வாகி சித்தார்த் ராய் கபுருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் பெற்றோரும் பச்சைக்கொடி காட்ட, தற்போது இவர்கள் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் திருமணம் வரும் டிசம்பர் 14ஆம் தேதி மும்பையில் நடக்கிறது.
இந்த திருமணம் வித்யா பாலன் குடும்ப வழக்கப்படி தமிழ் முறைப்படியும், சித்தார்த் ராய் கபூரின் குடும்ப வழக்கப்படி பஞ்சாபி முறைப்படியும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment