Thursday,22nd of November 2012
சென்னை::ஓணான் காட்சி படத்தில் காட்ட விலங்கு நல சான்று கேட்டதால் இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார். அரண்மனை பணிப்பெண்கள் பற்றிய படமாக உருவாகிறது மாடப்புரம். பிரவின் எழுதி இயக்குகிறார். அவர் கூறியதாவது: நாகர்கோவில் மார்த்தாண்டம் பகுதியில் இன்னமும் அரண்மனை அந்தப்புரத்தில் பணிபுரிந்த இன பெண்கள் வாழ்கிறார்கள். அவர்களை பார்க்க ஆண்களுக்கு தடை உள்ளது. கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் அப்பகுதிக்கு சென்றபோது அங்குள்ள பெரியவர்கள் அப்பெண்களை பார்க்கக்கூடாது என்று எங்களிடம் கூறினார்கள். இதை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. கட்டுப்பாடு மிக்க அந்த இனத்து பெண்ணை வாலிபன் ஒருவன் காதலிக்கிறான்.
அதன் முடிவு என்ன என்பதே கதை. புதுமுகம் சிவகுமார் ஹீரோ. ஷில்பா, பார்வதி ஹீரோயின். சுரேஷ், முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ரெஜி கொடுங்கானூர் ஒளிப்பதிவு. ஜினோஷ் ஆண்டனி இசை. கார்த்தி தயாரிப்பு. இப்படத்தின் ஷூட்டிங் முடித்து சென்சாருக்கு திரையிடப்பட்டது. கிளைமாக்ஸில் வரும் நெருக்கமான காட்சியை காரணம் காட்டி ஏ சான்றிதழ் தந்தனர். இதற்கிடையில் ஒரு காட்சியில் ஓணான் ஒன்றை காட்டி இருந்தோம். ஓணானுக்கு விலங்கு நல சான்று எங்கே என்று கேட்டார்கள். அதிர்ச்சி அடைந்தேன். சான்றிதழ் வாங்குவதற்கு நேரம் ஆகும் என்பதால் அக்காட்சியை நீக்க சம்மதித்தேன்.
Comments
Post a Comment