பாஸ் என்ற பாஸ்கரன் படத்துக்குப்பிறகு ஆர்யாவின் மார்க்கெட் சூடு பிடித்திருக்கிறது!!!

Friday,2nd of November 2012
சென்னை::பாஸ் என்ற பாஸ்கரன் படத்துக்குப்பிறகு ஆர்யாவின் மார்க்கெட் சூடு பிடித்திருக்கிறது. என்றபோதும் பெரிய வியாபாரம் என்று சொல்லும்படியாக இல்லை. ஆனால் இப்போது அவரை வைத்து இரண்டாம் உலகம் படத்தை இயக்கி வரும் செல்வராகவன் அந்த படத்துக்கு 50 கோடி பட்ஜெட் போட்டிருக்கிறார். இப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா இரண்டுபேருமே இரட்டை வேடங்களில் நடிப்பதோடு, ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளும இருக்கிறதாம்.

மேலும் ஜார்ஜியா காடுகளில் மாதக்கணக்கில் படப்பிடிப்பை நடத்தி விட்டு திரும்பிய செல்வராகவன் அடுத்தகட்ட படப்பிடிப்பை ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்துகிறார். அங்கேயும் பிரமாண்டமான செட்டுகள் போடுகிறார்களாம். இதன்காரணமாக படத்தின் பட்ஜெட் இன்னும் எகிறும் என்கிறார்கள். ஆனால் இதையறிந்து காலறை தூக்கி விட்டு நடக்கிறார் ஆர்யா. என்ன சமாச்சாரம்? என்று கேட்பவர்களிடத்தில், 50 கோடி 60 கோடியில நான் நடிக்கிற படம் படமாவுது. அப்படின்னா நானும் பெரிய நடிகருதானே. என் ரேஞ்ச் என்னன்னு எனக்கே இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சிருக்கு என்று ஸ்டைலாக முடியை கோதி விடுகிறாராம் ஆர்யா

Comments