Monday,19th of November 2012
சென்னை::என் வாழ்வில் நடந்தவை கடவுள் செயல். காலம்தான் எனக்கு ஆறுதல் தருகிறது என்றார் நயன்தாரா. நயன்தாராவுக்கு 27 வயது முடிந்து இன்று 28 வயது தொடங்குகிறது. இதையொட்டி அவர் கூறியதாவது: என் வாழ்வில் கிடைக்கும் ஆசிர்வாதங்களை சேகரித்து வைக்கிறேன். இதுவரை என் வாழ்வில் நடந்த எல்லாவற்றுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். காலம்தான் எனக்கு ஆறுதல் தரும் மருந்து. என் தொழில் என்னை நிறைவாக வைத்திருக்கிறது. யாரைப் பற்றியும் தாக்குவது எனது எண்ணமில்லை. என் வாழ்வில் நிறைய நடக்கிறது. என்னைப் பற்றிய அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. இதற்குமேல் என் வாழ்வில் எந்த எதிர்மறை சம்பவங்களுக்கும் இடமில்லை. செய்திகள் படிப்பதையே நிறுத்திவிட்டேன். இதனால் என்னை யார் தாக்குகிறார்கள் என்பது ஒருபோதும் எனக்கு தெரியாது. அப்படி வருவதெல்லாம் ஆதரமற்றவை. கடந்த சில வாரங்களாக நாள் முழுவதும் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன். மேலும் 2 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும். எனவே பார்ட்டி, நண்பர்களிடம் பொழுதை கழிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போதைக்கு ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் தெலுங்கு பட ரிலீஸ் மீதுதான் கவனமாக இருக்கிறேன். வரும் 30ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு நயன்தாரா கூறினார்.
Comments
Post a Comment