Friday,23rd of November 2012
சென்னை::காதலில் விழுந்தேன் படத்தின் 'நாக்க மூக்க' பாடலின் மூலம் பிரபலாமான நகுல், தொடர்ந்து சில படங்களில் நடித்துவருகிறார். 'நான் ராஜாவாகப் போகிறேன்' என்ற படத்தில் சாந்தினியுடன் ஜோடிபோட்டு நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் வசனம் எழுதி வருகிறார். ஆடுகளம், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ப்ரித்வி ராஜ்குமார் இயக்கிவருகிறார்.
இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் ’கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்’ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். சிம்புவின் காளை படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும், காளை படத்தில் சிம்பு பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய படங்களுக்கு மட்டும் இல்லாமல், பிறர் நடிக்கும் படத்திலும் பாடல்கள் பாடி வருகிறார் சிம்பு. லூசுப் பெண்ணே பாடல் தொடங்கி, போடா போடியில் உங்கப்பன் மவனே பாடல் வரைக்கும் சிம்பு பாடிய அனைத்து பாடல்களுமே இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.
இளைய இசையமைப்பாளர்களான யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், தமன், தரண் என அனைவரோடும் நல்ல நட்பு கொண்டுள்ளார் சிம்பு.
Comments
Post a Comment